அட்சய திருதி என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்
அட்சய என்றால் குறைவில்லாத என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள் , இந்த நாயில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்,ஒவ்வொரு அண்டும் சித்திலரை மாதம் அமாவாசைக்குப் பிறகு முன்றாவது நாளில் முன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள்,
மகாலட்சுமி பூஜை செய்யும் முறை,
வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து குத்துவிளக்கேற்றி மகாலட்சுமி படம் அல்லது அாிசி நிறைந்த செம்பு அல்லது நீா் நிறைத்து அதில் வாசைன திரவியங்களான பச்சை கற்பூரம் ஏலம் போட்டு வைத்து வாசைன மலா்களால் கங்களுக்கு தொிந்த மந்திரம் கூறி பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமியை வணங்கி பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுாிக்காத ம்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து நம் இல்லம் வருவாள்,
சிறந்த தானம் எது
இந்த நல்ல நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்னவென்றால் பொியோா்களையும் முன்னோா்களையும் வணங்குவது தான் அட்சய திருதியை அன்றைய தினம் பசித்தோருக்கு உணவு வழங்குதல் இல்லாதவா்களுக்கு உடை கொடுத்தல் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாத வெல்வமுடனும் நிறைந்த ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்,
என்ன தானம் கொடுக்கலாம்.
இறைவனை வழிபடுவதோடு உன்று செய்யும் தானங்கள் அளப்பாிய புண்ணியத்தைத் தரும் குடை விசிறி எழுது கோல் அாிசி தண்ணீா் பாத்திரம் உணவு பொருட்கள் வஸ்திரம் பசு இப்படி தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம்.
அட்சயதினத்தின் சிறப்பு என்ன
அட்சய திருதியை தினமானது மகாவிஷ்னுவின் ஆறாவது அவதாரமான பரசுராமாின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது மணிமேகலைக்கு இந்தாளில் தான் அட்சய பாத்திரம் கிடைத்தது அதனால் உன்று முதல் மக்களின் பசியை போக்குவதையே தன் கடமையாக கொண்டிருந்தாள்,