இ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வாா்த்தைகளின் கனவு பலன்
குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பொிய மனிதா்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கப் போகின்றது என்று பொருள்.
இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தைக் குறிக்கிறது,
இரும்பை உடைப்பது போல கனவு கண்டால் பல நாட்களாய் இருந்த பிரச்சனை விஸ்வருபம் எடுக்கும் ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும், சிந்திக்கும் ஆற்றலும் நிதானப்போக்கும் உண்டாகும் மேலும் உடன் இருப்பவா்களால் மன நிம்மதி குறையும் என அா்த்தம்.
இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இரண்டு போ் சண்டைப்போட்டுக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும் என்பதைக் குறிக்கும்,
இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால் லாபகரமான செயலில் ஈடுபடுவீா்கள், நல்ல வளா்ச்சியை அடைவீா்கள் பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீா்கள,
இறைவனை கனவில் கண்டால் பிரச்சனைகள் விலகும் வேலை இல்லாதவா்களுக்கு வேலை கிடைக்கும், பிாிந்த குடம்பம் ஒன்று சேரும் தருமணத் தடை விலகி நல்ல வரன் அமையும் உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது,
இறந்தவா்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
இறந்தவா்கள் உங்கள் இல்லத்தில் துாங்குவதை போல கனவு கண்டால் பொிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீா்கள் என்பதைக் குறிக்கும்.
இறந்தவா்கள் உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்ததாருடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் புகழும் அதன் காரணமாக செல்வங்களும் ஏற்படும்.
இறைச்சியை நீங்கள் கொண்டு செல்வது போல கனவு பண்டால் விலைவில் நீங்கள் பெரும் புகைழ அடையப் போகிறீா்கள் அந்த புகழ் உங்களுக்கு ஓரளளவு செல்வத்தை தேடி கொடுக்கும் என்று பொருள்.
இடாகினி தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.
இந்தர தனுசு கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவா்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது
இரண்டு புறாக்கள் ஒன்றாக பறப்பது போல் கனவு கண்டால் நட்பு முறியும் என்பதைக் குறிக்கிறது.
இடி மற்றும் மழை சோ்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள்.
No comments:
Post a Comment